இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நகராட்சியில் 151 பேர் போட்டி

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டிகளிலும் 151 பேர் போட்டியிடுகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி ஜன.4ம் தேதி வரை நடைபெற்றது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட நகராட்சி, ஒன்றியங்களில் உள்ள வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 4ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சார்பிலும், சுயேட்சைகள் சார்பிலும் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 192 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலினையின்போது, 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்நிலையில், நேற்று 4ம் தேதி  மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதில், பல்வேறு அரசியல் கடசியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியவர்களில் 31 பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

இதனைதொடர்ந்து, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட ஒப்புதல் கடிதத்துடன் மனு தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இதுதவிர சுயேட்சைகளாக போட்டியிட மனு தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவித்த சின்னங்களில் ஒரு வேட்பாளருக்கு ஒன்று ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

சின்னங்கள் ஒதுக்கீடு முடிந்ததும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுடன் பட்டியலாக வெளியிடப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சியை பொருத்த வரை நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மொத்தம் 151 பேர் களமிறங்கி உள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியிட்ட நிலையில், இன்று முதல் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். வரும் 19ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளதால் 17ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து வேட்பாளர்களும் சுறுசுறுப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: