நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னெச்சரிக்கை குறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் ஆலோசனை

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் IPS தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னெச்சரிக்கை குறித்து காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் அந்தந்த காவல் சரகம் பகுதியில் பிரச்சனை ஏற்படக்கூடிய நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் ஏதேனும் பிரச்சனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதட்டமான வாக்குச்சாவடிகள் பகுதிகளை காவல் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். இக்கூட்டத்தில் விழுப்புரம்  சரக துணைதலைவர் பாண்டியன் IPS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், ஜெயச்சந்திரன் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கரிக்கல் பாரி சங்கர் ,சபிபுல்லா, விஜிகுமார் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: