அக்கரைப்பேட்டை கிராமத்தில் மீனவர் வேடத்தில் இன்ஸ்பெக்டர் கொரோனா விழிப்புணர்வு நாடகம்: டாக்டர், செவிலியர், தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை

நாகை: நாகை நகர போலீஸ் ஸ்டேசன் மற்றும் அக்கரைப்பேட்டை ஊராட்சி நிர்வாகம் இணைந்து நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நாகை டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மீனவர் போல் வேடமணிந்து முகக்கவசம் அணியாமல் இருப்பதால் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவும் விதம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில் அவர்களது பாதங்களை கழுவி பாதபூஜை செய்து நன்றி செலுத்தினார். ஊர்க்காவல் படை வீரர்கள் ஏமதர்மராஜா, சித்ரகுப்தன், கொரோனா நுண்மி ஆகிய வேடம் அணிந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பாடல்களை பாடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்களுக்கு அக்கப்பேட்டை ஊராட்சி சார்பில் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டது. முன்னதாக டிஎஸ்பி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலர் முகமதுஊமர், அக்கரைப்பேட்டை ஊராட்சி தலைவர் அழியாநிதி மனோகரன், திமுக நாகை மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கலந்து கொண்டனர்….

The post அக்கரைப்பேட்டை கிராமத்தில் மீனவர் வேடத்தில் இன்ஸ்பெக்டர் கொரோனா விழிப்புணர்வு நாடகம்: டாக்டர், செவிலியர், தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை appeared first on Dinakaran.

Related Stories: