கல்வான் தாக்குதலில் பங்கேற்ற ராணுவ தளபதிக்கு சீனா கவுரவம் : குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவை புறக்கணித்தது இந்தியா!!

பெய்ஜிங் : சீனாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை இந்தியா புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.2020ம் ஆண்டு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் பங்கேற்ற ராணுவ கமாண்டரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சுடரை ஏந்திச் செல்ல சீனா அனுமதி அளித்ததை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா - இந்திய படைகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இந்த தாக்குதலில் கமாண்டராக இருந்தவர் Qi Fabao. தாக்குதலில் தலையில் காயம் அடைந்த அவரது வீரதீர செயயை கவுரவிக்கும் வகையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவக்க நாள் நிகழ்ச்சியில் சுடரை ஏந்திச் செல்ல சீனா அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியை இந்தியா புறக்கணித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை சீனா அரசியல் ஆக்கி இருக்கும் தகவல்கள் வருத்தம் அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. எனவே பெய்ஜிங்கில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கும் படி இந்திய தூதர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.இதனைத் தொடர்ந்து சீனாவில் சனிக்கிழமை தொடங்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப் போவதில்லை என்று தூர்தஷன் தெரிவித்துள்ளது.   

Related Stories: