பாங்டாக்: தாய்லாந்தில் ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் மகிழ்ச்சியோடு வாழும் நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளார். அவர் 8 பேரையும் வெறித் தனமாக காதலித்து திருமணம் செய்தார் என்பது கூடுதல் அதிர்ச்சி. தாய்லாந்தில் பச்சை குத்தும் தொழில் செய்து வரும் Ong Dam Sorot-ன் திருமண வாழ்க்கை குறித்த பதிவு தான் இப்போது ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது. அடுத்தடுத்து 8 திருமணங்களை செய்துள்ள Ong Dam Sorot-ன் 8 மனைவிகளுடனும் சண்டை சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.