சென்னையில் 37 இடங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது சுயேட்சை பெண் வேட்பாளர் ஒருவர் மட்டுமே வேட்பு மனுதாக்கல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி  நடைபெறுவதையடுத்து. சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும்  வேட்பாளர்கள் நேற்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முதல் நாள் என்பதால் சென்னையில் மட்டும் சுயேட்சை பெண் வேட்பாளர் ஒருவர் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்தார். தமிழ்நாட்டில்  உள்ள 21 மாநகராட்சிகள், 138   நகராட்சிகள் மற்றும் 490  பேரூராட்சிகள் என அனைத்து   நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்  பொதுத்   தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம்   தீவிரமாக  ஈடுபட்டு வந்தது. தேர்தலை நடத்துவது குறித்து அனைத்து   கட்சி  பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.  

அப்போது  ஒரேகட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து   கட்சி  பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.   இந்நிலையில், தமிழகத்தில்  பிப்ரவரி 19ம் தேதி ஒரே   கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடைபெறும் என்று மாநில   தேர்தல் ஆணையம் அறிவித்தது.  சென்னை  உள்பட  அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பு  மனுக்களை   தாக்கல் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்கு  உட்பட்ட  200 வார்டுகளுக்கு 37 இடங்களில் நேற்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.  மேலும் முதல் நாள் என்பதால் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற  பெரிய  கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் வேட்பு மனுக்களை  தாக்கல் செய்யவில்லை.

ஆனால் சுயேட்சையாக  போட்டியிடுபவர்கள் மட்டும்  வேட்பு மனு வாங்கி சென்றனர். ஆனால், நேற்று ஒரு நபர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் நிறைய மண்டலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் படிவங்களை மட்டுமே வாங்கி சென்றனர்.  இதையடுத்து இன்று நிறைய பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சனிக்கிழமை வேலை  நாட்கள் என்பதால் வேட்புமனுக்களை தாக்கல்  செய்யலாம் என ஏற்கனவே தேர்தல்  ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு  ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாட்கள் என்பதால்  வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய  முடியாது. மறுபடியும் திங்கட்கிழமை அதாவது  வரும் 31ம் தேதி மீண்டும் வேட்பு மனுதாக்கல் செய்யலாம்.  

பெண் வேட்புமனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையடுத்து நேற்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் சென்னையில் 37 இடங்களில் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆலந்தூர் மண்லடம் 12, வார்டு 158, நந்தம்பாக்கம், ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த எம்.விஜயா (51) என்ற சுயேட்சை வேட்பாளர் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்தார்.

Related Stories: