இருளர் குடியிருப்பு பகுதியில் கலைஞர் வீட்டு வசதி திட்ட மறு கணக்கெடுப்பு பணி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகளில், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசை வீடு மற்றும் வீடு இல்லாதவர்கள் குறித்த கடந்த 24ம் தேதி முதல் மறு கணக்கெடுக்கும் பணி துவங்கியது. அந்தந்த ஊராட்சி செயலர், சுய உதவிக் குழுவினர், விஏஓக்கள் மூலம் மறு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதையொட்டி, பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கணக்கெடுப்பு பணி துரிதப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, கொளத்தூர், கேகே நகர், நெமிலி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட காரந்தாங்கல், அக்கமாபுரம் ஆகிய கிராமங்களில் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கேகே நகரில் 100க்கும் மேற்பட்ட இருளர் சமுகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் குடிசை வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 44 குடும்பத்தினர் வசித்தனர். தற்போது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொளத்தூர் ஊராட்சி செயலர் அம்சநாதன் தலைமையில் மீண்டும் மறு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் வார்டு உறுப்பினர்கள் சங்கர், தனசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: