நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து அதிமுக ஆலோசனை நடத்துகிறது. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: