தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: பிப். 4-ம் தேதி மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம்

சென்னை: தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யாலம் என மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமையான நாளையும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமுனுக்களை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. பிப். 4-ம் தேதி மாலை 5 மணிவரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம் எனவும், பிப். 5-ல் பேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியிருந்தது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்.7 கடைசி நாள் ஆகும். 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்.19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப். 19-ல் தேர்தல் நடத்தப்பட்டு பிப். 22-ல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  வேட்புமன தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி நடந்துக் கொள்ள வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில்  காய்ச்சல் பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காகாணிக்க மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளது.

Related Stories: