ஆன்லைன் நெல் கொள்முதல் முறை ரத்து: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது விவசாயிகளை பெருத்த கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. பெரும்பான்மையான அப்பாவி விவசாயிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்வது என்றால் என்னவென்று தெரியாது.

இவர்களுக்கு மற்றவர்களது உதவி தேவை. மேலும், வருவாய்த் துறை அலுவலர்களின் ஒப்புதல் தேவை. இதுபோன்ற தாமதங்களினால் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை சரியான நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் பாழாகி, தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். பிப்ரவரி மாத இறுதிக்குள் குறைந்தது சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயிகளின் உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைத்தே தீர வேண்டும். ஆகவே, ஆன்லைன் பதிவை கட்டாயமாக்காமல் ஏற்கனவே உள்ள எளிய நடைமுறையின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: