தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்: இலங்கை அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட விசைப் படகுகளை  ஏலவிட அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போலவும் உள்ளது. இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏலத்திற்கு இன்னும் 15 நாட்கள் கூட இல்லாத நிலையில் ஒன்றிய அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, தேவையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். படகுகள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் இலங்கை நாட்டிடமிருந்து திரும்பப் பெறப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: