சொந்தமாக கேரவன் வாங்கிய குணச்சித்திர நடிகர்

ஐதராபாத்: தெலுங்கில் வெளியான திரிஷ்யம் 2, ஜதிரத்னாலு, டக் ஜெகதீஷ், மேஸ்ட்ரோ, ரங்தே உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நரேஷ். சினிமா படப்பிடிப்பின்போது ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் ஆகியோருக்கு கேரவன் வழங்கப்படும். படப்பிடிப்புக்கு இடையே ஓய்வு எடுக்கவும், மேக்அப் போடவும் நண்பர்களை சந்திக்கவும் இந்த கேரவனை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இவர்களை தவிர பிரபல நடிகர்களுக்கு மட்டும் கேரவன் வழங்கப்படும். சில சமயங்களில் ஒரே கேரவனில் 2 அல்லது 3 நடிகர்கள் பயன்படுத்திக்கொள்வர்.

தெலுங்கில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நரேஷுக்கு கேரவன் வழங்குவதில்லை. அவர் ஓய்வெடுக்க தனது காரைத்தான் படப்பிடிப்பில் பயன்படுத்துவார். இந்நிலையில் ஹீரோக்களுக்கு இணையாக தனக்கென சொந்தமாக கேரவன் வாங்கியிருக்கிறார் நரேஷ். வழக்கமான ஸ்டார் நடிகர்கள் மட்டுமே சொந்தமாக கேரவன் வைத்துள்ளனர். இதுகுறித்து நரேஷ் கூறும்போது, ‘வருடத்தில் பெரும்பாலான நாட்களில் படப்பிடிப்பில் இருக்கிறேன். வருடத்தில் இரு முறை கொரோனா பாதிப்பு அதிகரித்து விடுகிறது. இதிலிருந்து பாதுகாப்பாக இருக்கவே கேரவனை வாங்கியுள்ளேன். மற்றபடி ஹீரோக்களுக்கு போட்டியாக இதை நான் வாங்கவில்லை’ என்றார்.

Related Stories: