ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் புதிய வாகனம் பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

சென்னை: ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் புதிய வாகனம் பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டது. தமிழ்நாடு போக்குவரத்து துறையின் சுற்றைக்கையை எதிர்த்து ஓட்டுநர் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இலகுரக வாகனத்தை 8 வருடங்களுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 வருடங்களுக்கு பிறகும் இயக்க கூடாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை சுற்றறிக்கை விடுத்திருந்தது. அரசனை பிறப்பிக்கப்பட்டு 10 வருடங்களை ஆனநிலையில் சுற்றறிக்கையின் சாராம்சத்தை புரிந்துகொள்ளாமல், கொரோனா சூழலை சாதகமாக்கி மனு தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில்  கூறப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி சுற்றறிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

Related Stories: