கபாலீஸ்வரர் கோயிலில் சிலை மாயமான விவகாரம்: அறநிலையத்துறை அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?..ஐகோர்ட் கேள்வி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி திருமகள் மீது துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அறநிலையத்துறை அதிகாரி திருமகள் மீதான நடவடிக்கை குறித்த ஆவணங்களோடு ஆணையர் ஆஜராகி விளக்கம் தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலிஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோயிலில் புன்னைவனநாதர் சன்னிதியில் உள்ள சிவலிங்கத்திற்கு பார்வதி அம்மன் மயில் வடிவில் வாயில் பூக்களை எடுத்து பூஜை செய்யும், 1,000 ஆண்டுகள் பழமையான மரகத சிலை இருந்தது.

2004 குடமுழுக்கு விழாவுக்கு பிறகு பாம்பை வாயில் கவ்வியவாறு உள்ள மயில் சிலை வைக்கப்பட்டுள்ளது. பூவால் அர்ச்சிக்கும் மயில் சிலை மாயமானதாக ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி திருமகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆணையர் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டர்.

Related Stories: