மதுரவாயல் அருகே வாக்கி டாக்கி டவர் மீது ஏறி கார் ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்: நிலத்தை மீட்டுத்தர போலீஸிடம் கோரிக்கை

சென்னை: மதுரவாயல் அருகே நிலத்தை மீட்டுத் தரக்கோரி போலீஸ் குடியிருப்பில் உள்ள வாக்கி டாக்கி டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை 2 மணிநேரம் போராடி போலீசார் கீழே இறக்கினர். சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் 41 வயதான கார் ஓட்டுநர் நாகராஜ். இவருக்குச் சொந்தமாக திருவள்ளூர் அடுத்த அரண்வயலில் பூர்வீகச் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சொத்தை உறவினர் ஏமாற்றி போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ததாகவும், அந்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி போலீசில் அவர் புகாரளித்துள்ளார்.

போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாகராஜ் இன்று அதிகாலை மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் உள்ள வாக்கி டாக்கி டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சமாதானம் பேசினர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின்பு வாக்கி டாக்கி டவரின் மேலே இருந்து நாகராஜ் கீழே இறங்கி வந்தார்.    

Related Stories: