டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திருடிய பிரபல கொள்ளையன் கைது; 110 மதுபாட்டில்கள் பைக் பறிமுதல்

சென்னை: ஜாபர்கான்பேட்டை கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 22ம் ேததி இரவு வியாபாரம் முடிந்ததும், கடையின் மேற்பார்வையாளர் கேசவன் பூட்டிவிட்டு ெசன்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த மது பாட்டில்கள் கொள்ளைபோனது தெரிந்தது. இதுபற்றி குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், கே.ேக.நகர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த பிரபல கொள்ளையன் பிரகாஷ் (21), தனது நண்பர்களான ராஜேஷ், விக்னேஷ், வசந்த் ஆகியோருடன் சேர்ந்து, டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து, பிரகாஷை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில் இவர், சம்பவத்தன்று அசோக் நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த பைக்கை திருடி வந்து, டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்துவிட்டு சென்றது தெரியவந்தது. கைதான பிரகாஷிடம் இருந்து 110 மதுபாட்டில்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ராஜேஷ், விக்கி, வசந்த் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: