ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி ரயில் ஓடும்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் தேசிய விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புறநகர் மின்சார ரயில் இன்று ஞாயிற்று கிழமை கால அட்டவணைப்படி இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: