அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க விஜயகாந்த் வேண்டுகோள்.!

சென்னை: அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும், எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மாணவர்கள் முதலில் கற்று புரிந்து கொள்ள வேண்டும். மாணவ செல்வங்களே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட்டு, பிரச்சனைகளை துணிந்து எதிர்கொள்ள கொள்ளுங்கள்.’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: