சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரும் வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான தனி நீதிபதியின் கருத்து நீக்கம்..! ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரும் வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான தனி நீதிபதியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது ரோலஸ் ராய் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதம் வித்தித்து உத்தரவிட்டனர். மேலும் நடிகர்கள் மறறவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்ததது. அப்போது, காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி சொன்ன கருத்து என்னை புண்படுத்தியுள்ளன. சொந்த உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது. நிலுவை வரத்தொகையாக ரூ.32.30 லட்சத்தை கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி செலுத்தி விட்டோம் என்று விஜய்யின் மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரிய நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு உத்தரவு பிறப்பித்தனர். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகை ரூ.32.30 லட்சத்தை ஆக.7-ல் செலுத்திவிட்டோம் என்று விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: