பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 65 இடங்களில் பாஜக போட்டி; பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு!

டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் பாஜக 65 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான லோக் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் என 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் தொடங்குகிறது. இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதியினை அறிவித்துள்ளது.

இதன்படி பாஜக 65 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான முன்னாள் முதலமைச்சரின் லோக் காங்கிரஸ் 37 இடங்களிலும், சிரமோணி அகாலி தளம் 15 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அம்ரீந்தர் சிங் 22 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அஜித் பால் பெயரும் இடம் பெற்றுள்ளது.

“சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து சிறந்த வேட்பாளர் பட்டியலை தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான வெளியிட்டுள்ளோம்.” என்றும் அம்ரீந்தர் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இவர் பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் 34 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான முதற்கட்ட வேட்பாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை பாஜக வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: