ரஷ்யாவின் படைக் குவிப்பால் உக்ரைனில் பெரும் பதற்றம்!: அமெரிக்க தூதரக அதிகாரிகளை குடும்பத்துடன் வெளியேற ஜோ பைடன் அரசு உத்தரவு..!!

வாஷிங்டன்: உக்ரைனில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை குடும்பத்துடன் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா தனது பாதுகாப்பு கூட்டணியான நேட்டோவை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதில் உக்ரைனையும் சேர்க்க முடிவு செய்துள்ளது. தனது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்காவின் வலிமையான பாதுகாப்பு கூட்டணியின் ஒரு அங்கமாவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைனை நேட்டோவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் பேச்சுக்கள் நடந்து வந்தாலும் உக்ரைன் எல்லையில் படைகளை ரஷ்யா குவித்து வருகிறது.

உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் எந்த நேரத்திலும் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவு வருகிறது. உக்ரைனில் தனது ஆதரவாளரை கொண்டு பொம்மை அரசாங்கத்தை ஏற்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாக பிரிட்டன் அரசும் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் உக்ரைனில் பதற்றம் நிலவி வரும் வேளையில், அமெரிக்க தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் அனைவரும் வெளியேற ஜோ பைடன் அரசு உத்தரவிட்டுள்ளது. கீவ் நகரத்தில் உள்ள தனது தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் நிர்வாகிப்பாளர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

Related Stories: