வாணியம்பாடி அருகே வயல் வெளியில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

வாணியம்பாடி :  வாணியம்பாடி அருகே வயல்வெளியில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.வாணியம்பாடி அருகே கலந்திரா ஊராட்சி அடுத்த கினிக்கிட்டி வட்டம்  உள்ளது. இப்பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணி புரியும் ராஜு என்பவருக்கு  சொந்தமான விவசாய நிலத்தில், நேற்றுமுன்தினம் இரவு கால்வாய் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக  திருப்பத்தூர் வனச்சரகர்  பிரபுவுக்கு தகவல்  கொடுத்தார். அதன்படி, வனகாப்பாளர் அண்ணாமலை மற்றும் கிருஷ்ணன் சவுந்தர், சதீஷ், சச்சின் ஆகியோர் விரைந்து சென்று கிராம மக்கள் உதவியுடன் மலைப்பாம்பை பிடித்து ஏலகிரி மலை காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

Related Stories: