முதல்வர் வாழ்த்து நேதாஜி காட்டிய ஒளியில் முன்னோக்கி செல்வோம்

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காட்டிய ஒளியில் முன்னோக்கி செல்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட  சமூக வலைதளப் பதிவு: இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன். சூரியக் கதிர்களைப் போலவே அவர் புகழும் நாடெங்கும் பரவியுள்ளது. அவர் காட்டிய ஒளியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கிச் செல்வோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: