தமிழக பொதுப்பணித்துறையில் டெண்டர் எடுக்க 4 வருடம் பணி முன் அனுபவம் தேவை: கான்டிராக்டர்களுக்கு நிபந்தனை விதித்தது அரசு

சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் முதல் வகுப்பு 5ம் வகுப்பு வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள், டெண்டர் மூலம் ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்து வருகின்றனர். இதில், முதல் வகுப்பு கான்ட்ராக்டர்கள் ரூ.10 கோடிக்கு மேல் உள்ள பணிகள், இரண்டாம் வகுப்பு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான பணிகள், மூன்றாம் வகுப்பு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான பணிகள், நான்காம் வகுப்பு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையும், 5ம் வகுப்பு கான்ட்ராக்டர்கள்  ரூ.50 லட்சம் வரையிலான பணிகளுக்கு டெண்டர் எடுக்கலாம்.

இந்த பணிகளை டெண்டர் எடுக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு வகுப்பு கான்ட்ராக்டர்கள் தங்களது வகுப்பின் மதிப்புக்கு ஏற்ப 30 சதவீதம் சொத்து மதிப்பு சான்றிதழை காட்ட வேண்டும். அதன்படி முதல் வகுப்பு கான்ட்ராக்டர்கள் ரூ.3 கோடி வரை சொத்து மதிப்பு சான்றிதழை காட்ட வேண்டும். இரண்டாம் வகுப்பு கான்ட்ராக்டர்கள் ரூ.1.50 கோடி வரையும், மூன்றாம் வகுப்பு கான்ட்ராக்டர்கள் ரூ.60 லட்சம், நான்காம் வகுப்பு கான்ட்ராக்டர்கள் ரூ.15 லட்சம் வரையும், 5ம் வகுப்பு கான்ட்ராக்டர்கள் ரூ.15 லட்சத்துக்கு குறைவான சொத்து மதிப்பு சான்றிதழை பொதுப்பணித்துறையிடம் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சம்பிரக்கும் கான்ட்ராக்டர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதே போன்று, டெண்டர் எடுக்க விரும்பும் கான்ட்ராக்டர்கள் தங்களது வகுப்புக்கான மதிப்புக்கு ஏற்ப  10 பணிகளையாவது குறைந்த பட்சம்  மேற்கொண்டு இருக்க வேண்டும். அதேபோன்று அவர்கள் 4 வருடம் கட்டுமான பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். 

Related Stories: