சித்தூரில் ஜெய்பீம் சினிமா பாணியில் பணம் திருடியதாக வேலைக்கார பெண்ணை தாக்கிய போலீசார்: ஜெயிலர் மனைவியே செலவழித்தது அம்பலம்

சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் பாபு (38), கூலி தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (32). இவர் அதே பகுதியில் உள்ள சித்தூர் கிளை சிறைச்சாலையில் ஜெயில் அதிகாரியாக பணிபுரியும் வேணுகோபால் வீட்டில் வேலை செய்கிறார். கடந்த 17ம் தேதி ஜெயிலர் வீட்டில் ரூ.2 லட்சம் பணம் காணவில்லை என போலீசில் புகார் தரப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு உமா மகேஸ்வரியை போலீசார் அழைத்தனர். கணவருடன் காவல் நிலையம் சென்ற உமா மகேஸ்வரியை சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமார் தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினார்.

தொடர்ந்து, காவலர் ஒருவர் உமா மகேஸ்வரியை ஜெய்பீம் சினிமா பாணியில் கை, கால்களை கயிற்றால் கட்டி லத்தியால் அடிப்பாதத்திலும், முதுகிலும் சரமாரியாக அடித்துள்ளார். தலையை பிடித்து சுவற்றில் பலமாக மோதியுள்ளார்.பணத்தை திருடவில்லை என உமா மகேஸ்வரி கூறியும், போலீசார் விடவில்லை. பின்னர், இன்ஸ்பெக்டர் நரசிம்ம ராஜூவிடம் அந்த பெண்ணை அழைத்துச் சென்ற காவலர், அவர் கண்ணெதிரே மீண்டும் லத்தியால் அடித்துள்ளார்.ஆனால்  ‘ஜெயிலரின் மனைவியே பணத்தை எடுத்து செலவு செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடக்க முடியாத நிலையில், அந்தப் பெண் பத்திரிகையாளர் களிடம்  நடந்த விவரங்களை நேற்று தெரிவித்தார். அதன் பிறகே, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: