ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் போட்டிக்கு தேர்வாகுமா?

சென்னை: ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் 276 படங்களில் ஜெய்பீம் படமும் இடம்பெற்று உள்ளது. சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் நடித்த ஜெய்பீம் படம், சிறந்த படம் மற்றும் நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோல் உலகம் முழுவதும்இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பல படங்களில் 276 படங்களை ஆஸ்கர் விருது குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

அந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து ஜெய்பீம் தமிழ் படமும், மோகன்லால் நடித்த மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற மலையாள படமும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகும் படங்களின் பட்டியல் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்படும். அதில் இந்த இரண்டு படங்களும் இடம்பெறுமா என்பது தெரிந்துவிடும். ஆஸ்கர் விருது விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் வரும் மார்ச் 27ம் தேதி நடக்கிறது.

Related Stories: