கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு ஜன.1 முதல் அகவிலைப்படி உயர்வு

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்விலை 1-1-2020 முதல் 30-6-2021 வரை நிறுத்தி வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படியினை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவுப்படி, அகவிலைப்படி தொடர்பாக ஏற்கனவே பதிவாளர் அலுவலக அந்தந்த நிர்வாக பிரிவுகளில் வழங்கியுள்ள அறிவுரைகளின்படியும் அகவிலைப்படி வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: