ஏப்.13க்குள் திருப்போரூர் கந்தசாமி, ஆளவந்தான் கோயில் சொத்துக்கள் மீட்கப்படும்!: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தகவல்..!!

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயில் சொத்துக்களை மீட்டது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்களை அபகரிக்க 20க்கும் மேற்பட்ட குழுக்கள் முயற்சிப்பதாக ஜெகன்நாத், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். ரூ.60,000 கோடி மதிப்புள்ள 2,000 ஏக்கர் நிலத்தை, சொத்துக்களை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனுதாரர் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். 2 கோயில்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 2 கோயில்களின் சொத்துக்கள் ஏப்ரல் 13ம் தேதிக்குள் மீட்கப்பட்டுவிடும் என்று இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: