திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டத்தில் ₹3.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆர்.கே.பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கான புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தை நிர்வாக வசதிக்காக 2 ஆக பிரித்து, ஆர்கே பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்கே பேட்டை பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டது. அதன் பின்புறம் புதிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ₹3.5 கோடி கடந்த  ஆட்சியில் ஒதுக்கீடு செய்து, புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் கிடப்பில் இருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம், நேற்று வட்டாட்சியர் அலுவலகம் புதிய கட்டி டத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சியில், திருத்தணி ஆர்டிஓ சத்யா, ஆர்கே பேட்டை வட்டாட்சியர் மணிவாசகம், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் பி.பழனி, சி.என்.சண்முகம், வழக்கறிஞர் சி.ஜெ.சீனிவாசன், அரசு வழக்கறிஞர் ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரமிளா வெங்கடேசன், அம்மு சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தி செங்குட்டுவன், வி.ஜி.மோகன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: