சுரேஷ் கோபிக்கு கொரோனா

சென்னை: மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருப்பவர் சுரேஷ் கோபி. தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.  சமீபகாலமாக தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் பாப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் எனக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் தவிர வேறெந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: