இதய செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகள் 3 பேரின் உயிரை மீட்டது காவேரி மருத்துவமனை

சென்னை: இதய செயலிழப்பினால் ஏறக்குறைய உயிரிழப்பு நிலைக்குச் சென்ற 3 நோயாளிகளுக்கு வெற்றிகரமான சிகிச்சையின் மூலம் அவர் களது உயிர்கள் மீட்கப்பட்டிருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்  கூறியதாவது: திடீரென ஏற்பட்ட இதய செயலிழப்பினால் 3 நோயாளிகள் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகளே இல்லாத நிலையில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து வியக்கும் வகையில் அவர்கள் மீண்டெழுந்த தருணங்களை மருத்துவ அதிசயங்கள் என்றே குறிப்பிடலாம்.

 

பெரிய அளவிலான இதய செயலிழப்பு ஏற்பட்டு, உயிரிழந்திருக்கக்கூடும் என்ற நிலையில் கைவிட்ட நிலையில் சில நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் மீட்கப்பட்டனர். எனினும், இது அதிர்ஷ்டம் மட்டுமல்ல, மாறாக, அவசரநிலை சிகிச்சைகள் மற்றும் தீவிர மருத்துவ பராமரிப்பு ஆதரவே, ஏறக்குறைய உயிரிழப்பு நிலையிலிருந்த 3 நோயாளிகளை மீண்டும் உயிருள்ளவர்களாக கொண்டு வந்திருக்கிறது. அதிக அனுபவமும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட மருத்துவர்கள் மற்றும் அவர்களது அவசரநிலை குழுக்களின் மனஉறுதியும், ஆற்றலும், பொறுப்புறுதியும்தான் ஒரு நோயாளியின் உயிரைக் காப்பது மீது ஒருபோதும் நம்பிக்கையை இழந்துவிடாமல், தளரா முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளுமாறு செய்கிறது.

மருத்துவர்களும் மற்றும் அவர்களது குழுக்களும் மருத்துவ நிபுணத்துவத்தையும் மற்றும் இங்கு அமைந்துள்ள மிக நவீன உட்கட்டமைப்பு வசதிகளையும் பயன்படுத்தி, உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகளே இல்லாமல் வந்த 3 நோயாளிகளை காப்பாற்றியிருக்கின்றனர் என்பதை நினைத்து உண்மையிலேயே அதிகம் பெருமைப்படுகிறோம்.  3 நோயாளிகளுமே எவ்வித சிக்கல்களும் இல்லாமல், குணமடைந்து உடல்நலத்தோடு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: