சென்னை வந்த விமானத்தில் நாகையை சேர்ந்த மதர்ஸா பஷீர் என்ற பயணி மாரடைப்பால் மரணம்

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி மாரடைப்பால் மரணமடைந்தார். துபாயிலிருந்து ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் 117 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்னை வந்து கொண்டிருந்தது. விமானம் சென்னையை நெருங்கி கொண்டிருந்தபோது நாகையை சேர்ந்த மதர்ஸா பஷீர் (47) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டநிலையில், விமானம் தரையிறங்கியதும் மருத்துவர்கள் பரிசோதித்ததில் மதர்ஸா பஷீர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். 

Related Stories: