காசநோயினால் கடந்த 2020ம் ஆண்டில் 70,545 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காசநோயினால் 82,352 பேர் பாதிப்பு

* கடந்த ஆண்டைவிட 17 சதவீதம் அதிகமாகும்

* மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் காசநோயினால் கடந்த 2020ம் ஆண்டில் 70,545 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த  ஆண்டு 82,352 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 17  சதவீதம் அதிகமாகும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025க்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்த போது நாடு முழுவதும் 21.38 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே கடந்த ஆண்டின் புள்ளி விவரங்களும் அமைந்திருந்தன.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 4.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 82,352 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 18,016 பேரும், அரசு மருத்துவமனைகளில் 64,336 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காசநோயினால் கடந்த 2020ம் ஆண்டில் 70,545 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 82,352 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் அதிகம் ஆகும்.

மேலும் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது காசநோய்க்கும், கொரோனா தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், பலர் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொண்டது கூட பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம். அதைப்போன்று பொது முடக்க தளர்வுகளின் போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதுவும் காசநோய் பாதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். காசநோய்க்கும், கொரோனா தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், பலர் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொண்டது கூட பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம்.

Related Stories: