குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். நேரில் வலியுறுத்திய டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அரசியல் கட்சி குழுவிடம் அமித்ஷா உறுதி அளித்தார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியானது.

Related Stories: