டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரையில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. உபி.யில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. பஞ்சாப்பில் பிப்ரவரி 16ம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.