கொரோனா வைரஸ் பரிசோதனை; திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக சுகாதாரத்துறை.!

சென்னை: கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வது குறித்து திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வது குறித்து திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அறிகுறி இல்லாதவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான உள்நாட்டு பயணிகளுக்கு தொற்று பரிசோதனை தேவையில்லை எனவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்தவர்கள் வயது மற்றும் இணை நோயினால் ஆபத்து இல்லாதவர்களாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சளி, காய்ச்சல், தொண்டை வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, மூச்சுத்திணறல் மற்றும் பிற சுவாச அறிகுறிகள் இருந்தல் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் தொடர்பில் இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடல் மற்றும் வான் வழியாக வரும் சர்வதேச பயணிகள் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: