சிவகங்கை அருகே 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

சிவகங்கை :  சிவகங்கை அருகே ஏரியூர் பகுதியிலுள்ள ஆகாசப்பாறையை, பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், பள்ளி மாணவன் தருனேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தபோது அங்கு சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: சிவகங்கை அருகே திருமலையில் சுமார் 4 ஆயிரம் ஆண்டு பழமையான காவி நிற பாறை ஓவியங்கள் உள்ளன.

அதே காலத்தை சேர்ந்த காவி நிற மனித உருவம் சிவகங்கை அருகே ஏரியூர் மலையின் தென் திசையில் காணப்படும் ஆகாசப்பாறை பகுதியிலுள்ள ஒரு பாறையில் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. கிமு 7ம் நூற்றாண்டு முதல் கிமு 3ம் நூற்றாண்டு வரை பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. பழங்கால மனிதன் வாழ்ந்த ஒரு குகையின் உள்ளே ஓவியங்கள் காவி நிறத்தில் காணப்படுகின்றன.

இங்கு ஆதிமனிதன் வாழ்ந்த குகை, பாறை ஓவியங்களோடு, 10க்கும் மேற்பட்ட மருந்துக்குழிகளும் உள்ளன. இந்த குழிகள் சற்றே சிறியளவில் உள்ளது. மலையில் கிடைத்த மூலிகைகளை, இந்த குழிகளில் இடித்து, மருத்துவம் செய்து வந்திருக்கலாம். சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாகவும் கருதலாம்.  இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: