₹9.97 கோடி மதிப்பில் பட்டினப்பாக்கத்தில் நவீன மீன் அங்காடி : அரசாணை வெளியீடு

சென்னை : சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் சார்பில்  தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 125 பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நிர்வாக அனுமதியும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.9.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நவீன மீன் அங்காடியில் சுற்று சுவருடன் 366 மீன் அங்காடிகள், மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர், கழிவறை வசதிகள்,  மீன்களை சுத்தம் செய்ய தனியாக 2 பகுதிகள், இந்த அங்காடி வளாகத்தில் 40 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில்  வாகன நிறுத்த வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும்  ஏற்படுத்தப்பட உள்ளது.

Related Stories: