என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் : உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை : என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றும், தை பிறந்ததால் மட்டுமல்ல ஏற்கனவே எனக்கு நல்ல வழிதான் உள்ளது என்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.  சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.  தொடர்ந்து நிருபர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பொங்கல், புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  தை பிறந்துள்ளது அரசியல் பணி, திரையுலகில் இலக்கு எதுவும் உள்ளதா என்ற கேடக்கிறீர்கள். இலக்கு என்று எதுவுமில்லை. எனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன், தலைவர் சொல்வதை செய்து கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உங்களுக்கு வழி பிறக்குமா? என்று நிருபர்கள் கேட்டபோது, ‘எனக்கு ஏற்கனவே நல்ல வழிதானே இருக்கின்றது’ என்று உதயநிதி பதில் அளித்தார்.

Related Stories: