திருவள்ளுவரின் கோட்பாடுகள் பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக தனித்து நிற்கின்றனர்: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்

டெல்லி: திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை, பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன என அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன் என கூறி அந்த காணொளியையும் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

 திருவள்ளுவர் தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: