கொரோனா பரவலைகாரணமாக ஜன.17, 18 ஆகிய தினங்களில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகிய தினங்களில் பக்த்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தோற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்: 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன் கீழ் தமிநாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும்ஜன.14 முதல் ஜன.18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பௌர்ணமி தினங்களான ஜன.17 காலை 04.14 மணி முதல் ஜன.18 அதிகாலை 06.00 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்  

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: