பொங்கல் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!

மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றத்தை அடுத்து போட்டியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.  

ஜல்லிக்கட்டில் களம் காணும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை  நடைபெற்றது. பரிசோதனைக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக 13 பேர் கொண்ட மருத்துவ குழு  அமைக்கப்பட்டிருந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில்ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவக்குழுக்களும், அவசர ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல காளையர்கள் ஆர்வத்துடன் போட்டியில் களத்தில் உள்ளனர். களத்தில் வெற்றி பெரும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு தங்க காசுகள், மிக்சி, கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும்  பரிசாகா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 காளையர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: