108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு மையத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். சென்னை, டிஎம்எஸ், வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையை, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆய்வு செய்தார். அவரிடம், 108 வாகன மருத்துவ பணியாளர்கள் முதலுதவி செய்வது குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு வரும் அழைப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், தமிழகத்தில் உள்ள, ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு குறித்து கேட்டறிந்ததுடன், தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ளவும், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்பின், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பல்நோக்கு அரசு மருத்துவமனைகளில், மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: