ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை அடங்கிய பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு: சென்னையில் 21 இடங்களில் 6,000 பேர் பங்கேற்பு

சென்னை: ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை அடங்கிய பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை அடங்கிய பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முழு ஊரடங்கு காரணமாக இந்த தேர்வு பின்னர் ஒத்திவைக்கப்பட்டு, இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை அடங்கிய பதவிகளுக்கு193 காலியிடங்களுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது.

கொரோனா விதிகளை பின்பற்றி 9 மாவட்டங்களில் நடைபெற்ற இத்தேர்வை 20,000- க்கும் மேற்பட்டோர் எழுதினர். சென்னையில் 21 இடங்களில் 6,000 பேர் பங்கேற்றனர். இத்தேர்வை நெய்வேலி, மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து எழுதியுள்ளனர். தேர்வின் மையங்கள் மற்ற மாவட்டங்களில் போடப்பட்டதால் போக்குவரத்து சிரமம் இருந்ததாக தெரிவித்தனர். தேர்விற்கான வினாத்தாள் மிக கடினமாக இல்லை என்றும் படித்தவர்கள் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் தேர்வினை எழுதியவர்கள் கூறியுள்ளனர்.         

Related Stories: