தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி பண்ணாரி சோதனை சாவடியில் சரக்கு லாரிகள் தடுத்து நிறுத்தம்-உணவு கிடைக்காமல் டிரைவர்கள் தவிப்பு

சத்தியமங்கலம் :  தமிழகத்தில் கொரோனா. ஒமிக்ரான் தொற்று பரவி வருவதால் நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக செல்லும் சரக்கு லாரிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் இரு மாநில எல்லைகளில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் ஓட்டல், டீக்கடை ஏதும் இல்லாததால் ஓட்டுநர்கள் உணவின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்தனர். காய்கறி, பால், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை அனுமதிப்பது போல் மற்றும் சரக்கு லாரிகளையும் இயக்க அனுமதி வழங்கவேண்டு என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: