திருக்குறள் ஆன்மீக கருத்துக்கள் நிறைந்தது; அதனை அரசியல் சித்தாந்தங்களுக்காகவும், நிர்பந்தங்களுக்காகவும் அதை சுருக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவை: திருக்குறள் ஆன்மீக கருத்துக்கள் நிறைந்தது எனவும் அதனை அரசியல் சித்தாந்தங்களுக்காகவும், நிர்பந்தங்களுக்காகவும அதை சுருக்க கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறள் மலை சங்கம் சார்பில் உலக திருக்குறள் மாநாடு இன்று தொடங்கியது. உலக திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார். பின்னர் கல்வெட்டில் திருக்குறள் என்ற நூலை ஆளுநர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 10 மாணவர்களுக்கு சிறந்த தமிழ் மாணாக்கர் சான்றிதழ்களையும், தமிழ் சான்றோர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர்; தமிழ் மொழியில் வளர்ச்சி எற்பட்டால் சமூகம் வளரும் என தெரிவித்த அவர், இந்தியாவில் சில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை போல பிற மொழிகளுக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்படுவது இல்லை என தெரிவித்தார். ஆங்கிலம் முதல் மொழியாக வைத்து, இரண்டாவது மொழியாக தமிழ் மொழியை வைத்து கற்க வேண்டும் எனவும், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வேண்டும் எனவும் தெரிவித்தார். ‘தமிழகம் புண்ணிய பூமி, ஆன்மீக பூமி. இங்கு சிறந்த மனிதர்கள் இருந்துள்ளார்கள் எனவும் திருவள்ளுவர், விவேகானந்தா, வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாராதி ஆகியோர் ஆன்மீகம் மூலம் இளைஞர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற முதல் குறளில் வரும் ஆதி பகவனும் ரிக் வேத்தில் வரும் பரமாத்மாவும் ஓன்றுதான் எனகூறிய அவர், திருக்குறள் ஆன்மீக கருத்துகளை பேசி இருக்கின்றது எனவும், பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான விடயங்களையும், ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் திருக்குறள் போதிக்கின்றது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; திருக்குறள் ஆன்மீக கருத்துக்கள் நிறைந்தது எனவும் அதனை அரசியல் சித்தாந்தங்களுக்காகவும், நிர்பந்தங்களுக்காகவும் அதை சுருக்க கூடாது எனவும் கூறினார்.

Related Stories: