கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயம் குளித்தலையில் மாணவர்கள் சிலம்பம் ஆடி விழிப்புணர்வு

குளித்தலை : தமிழகத்தில் தற்பொழுது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகி வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள் பொது இடங்களில் கூடும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளித்தலை கடம்பன் துறை ஆற்றுப்படுகையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் தலைமையில் சர்வதேச பஞ்சபூத தற்காப்புக் கலைக் கழகத்தில் சிலம்பாட்ட பயிற்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகள் முக கவசம் அணிந்து கொண்டு பல்வேறு சிலம்பாட்ட கலைகளை ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: