குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் முழு விசாரணை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: குன்னூர் அருகே கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து விசாரிக்க, விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை கொண்ட இக்குழு, ‘ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே முக்கிய காரணம் என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் எந்தவித தொழில்நுட்ப குறைபாடும் இல்லை எனவும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தகவல்கள்’ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான அனைத்துக்கட்ட விசாரணைகளையும் கடந்த இரண்டு வாரங்களாக முடித்து டெல்லி சென்ற முப்படை குழு முழு, விசாரணை அறிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று காலை நேரடியாக வழங்கியுள்ளது.

அதில்,ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணங்கள், நேரில் பார்த்த சாட்சியங்கள், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை, வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் பரிந்துரை ஆகிய விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் சதி இல்லை எனவும், ேமாசமான வானிலையால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும்  கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

Related Stories: