வடகிழக்கு மாநிலங்களுக்கு விரைவில் சுற்றுலா ரயில்: அமைச்சர் வைஷ்ணவ் தகவல்

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிற்கு சென்ற ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக ரயில்கள் இயக்கப்படுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இது தொடர்பாக வடகிழக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வடகிழக்கு மாநிலங்களில் கொட்டி கிடக்கும் இயற்கை அழகை உலகம் முழுவதும் வெளிப்படுத்துவதே ரயில்வே துறையின் முக்கிய பணியாகும். இதற்கான முக்கிய நகரங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.

இப்பிராந்தியத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை காட்சியை கண்டு களிக்க 360 டிகிரி சுழலும் இருக்கை, நீண்ட கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட விஸ்டாடோம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் இன்டர்சிட்டி, ஜன் சதாப்தி ரயில்களும் இயக்கப்பட உள்ளன. கவுகாத்தி வரையிலான மின் வழித்தடம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் ரயில்வே திட்டங்களுக்காக இந்தாண்டு மட்டும் ₹7 ஆயிரம்கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: