திருவள்ளூர்: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட துணை தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்குன்றம் மண்டலத்துக்கு துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சம்பத். இவரிடம் கடந்த வாரம் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் கூட்டு பட்டாவில் உள்ள குளறுபடியை நீக்குவதற்காக அணுகி உள்ளார். அப்போது அதிகாரி சம்பத், ‘’ பட்டாவில் இருந்து பிரித்து தரவேண்டுமென்றால் நான் கேட்கின்ற பணம் கொடுக்கவேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.
